பதிவு செய்த நாள்
31
ஜன
2015
11:01
உளுந்தூர்பேட்டை: செங்குறிச்சி கிராமத்தில் கனகவல்லி நாயிகா சமேத லட்சுமி நாராயண பெருமாள் கோவில் 2ம் தேதி அஷ்டபந்தன மகா சம்ப்ரோஷணம் நடக்கிறது. இதையொட்டி இன்று மாலை 5 மணிக்கு ஹோமம், முதல் கால பூர்ணாஹூதியும், 1ம் தேதி காலை 7 மணிக்கு யாக சாலை புண்யாக வாசனம், நித்ய ஹோமம், இரண்டாம் கால பூர்ணாஹூதி, மாலை 5 மணிக்கு மகாசாந்தி திருமஞ்சனம், மூன்றாம் கால பூர்ணாஹூதி நடக்கிறது. 2ம் தேதி காலை 6 மணிக்கு விஸ்வரூபம், புண்யாகவாசனம், நித்ய ஹோமம், நான்காம் கால பூர்ணாஹூதி, யாத்ராதானம், கடம் புறப்பாடு நடக்கிறது. காலை 10 மணிக்கு கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மகா சம்ப்ரோஷணம் நடக்கிறது. மாலை 4 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், இரவு 9 மணிக்கு பெருமாள் சேஷ வாகனத்தில் வீதியுலா புறப்பாடும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் சவுந்திர ராஜ அய்யங்கார் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.