சாரதாம்பாள் கோவிலில் ரங்கன்ஜீயின் உபன்யாசம் நிறைவு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02பிப் 2015 03:02
புதுச்சேரி: சாரதாம்பாள் கோவிலில் நேற்று, ரங்கன்ஜீயின் ராம பட்டாபிஷேகம் உபன்யாசம் நடந்தது.
கிருஷ்ணப்ரேமிக பஜனை மண்டலி சார்பில், எல்லப்பிள்ளைச்சாவடி சிருங்கேரி சிவகங்காமடம் சாரதாம்பாள் கோவிலில், கடந்த 23ம் தேதி முதல் சமர்த்த ராமதாசரின் சரித்திரம் என்ற தலைப்பில் ரங்கன்ஜீயின் உபன்யாசம் நடந்து வருகிறது. கடந்த 24ம் தேதி ராம தர்சனம், 25ம் தேதி காசி யாத்திரை, 26ம் தேதி அயோத்யா யாத்திரை உபன்யாசம் நடந்தது. 28ம் தேதி ஹனுமத் பிரதிஷ்டை, 29ம் தேதி சிவாஜி சரித்திரம், 30ம் தேதி ராமதாச சிஷ்யர்களின் சரித்திரம் நடந்தது.
நிறைவு நாளான நேற்று, ராம பட்டாபிஷேகம் என்ற தலைப்பில் உபன்யாசம் நடந்தது. ரங்கன்ஜீ உபன்யாசம் செய்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.