மயிலம் : மயிலம் பகுதி கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது. மயிலம் அடுத்த ஆலகிராமம் எமதண்டீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. இதையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அர்ச்சனைகள், வழிபாடுகள், மகா தீபாராதனை வழிபாடுகள் நடந்தது.இதில் ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை சுந்தரமூர்த்தி குருக்கள் செய்திருந்தார்.
மயிலம் சுந்தர விநாயகர், வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு, மகா தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்த்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.கொல்லியங்குணம் சிவன் கோவிலில் நேற்று மாலை சுவாமிக்கு, பழவகைகளினால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் நடந்த மகா தீபாராதனையில் ஏராளமானவர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.