வாணன் எனும் அசுரன், தன் தாயின் 108 சிவலிங்க வழிபாட்டிற்காக 107 லிங்கங்களை பழமையான சிவாலயங்களில் இருந்து எடுத்து வந்தான். 108வது லிங்கத்தை எடுக்க, திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே திருப்புகலூர் தலத்திற்கு வந்தாள். அங்கு அக்னி வழிபட்ட அக்னிலிங்கம் இருந்தது. அதை அவனால் அசைக்கக்கூட முடியவில்லை. எனவே தன் தாயை இத்தலத்திற்கு அழைத்து வந்து வழிபடச் செய்தான். அந்த லிங்கம் உயரமாக இருந்ததால், அவனது தாயாரால் அதற்கு மாலையிட முடியவில்லை. அந்த பெண்மனியின் வழிபாட்டை ஏற்க விரும்பிய ஈசன், சற்றே குனிந்து மாலையை ஏற்றார். இதனால் இத்தல லிங்கம் சாய்வாக இருக்கிறது. கோணலாக இருக்கும் இந்த சிவன் கோணப்பிரான் எனப்படுகிறார்.