Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பிப்., 17 சிவராத்திரி விழா! விராலிமலை கோவிலில்ரூ.5 லட்சம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மலைக்கோவில் செல்லும் பாதையில்அபாய குழி பக்தர்கள் கடும் அவதி!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 பிப்
2015
12:02

ஓசூர்:ஓசூர் சந்திர சூடேஸ்வரர் மலைக்கோவிலுக்கு செல்லும் பாதையில், பல்வேறு பணிகளுக்காக தோண்டப்பட்ட அபாயகரமான குழி மூடப்படாமல் உள்ளதால், அதை தாண்டி செல்லும் பக்தர்கள், குழிக்குள் விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர்.

ஓசூர் தேர்ப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள சந்திரசூடேஸ்வர் கோவில் மிகவும் பழமையான கோவில் ஆகும். இங்கு, ஆண்டுதோறும் நடக்கும் தேர்த்திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. திருவிழா சமயங்களில், விநாயகர் தேர் முன்னே செல்ல, அதைத்தொடர்ந்து வரும் சந்திரசூடேஸ்வரர் மற்றும் மரகதாம்பாள் வீற்றிருக்கும் தேர்கள் மீது, உப்பு, மிளகு, வாழைப்பழம் ஆகியவற்றை தூக்கி எரிந்து, லட்சக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.தேர்த்திருவிழா சமயங்களில், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்கள் மட்டுமின்றி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்கள், முடி காணிக்கை மற்றும் அன்னதானம் வழங்கி, தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா, வரும் மார்ச், 5ம் தேதி நடக்கிறது. இதையொட்டி, கடந்த, 2ம் தேதி, பால் கம்பம் நடும் நிகழ்ச்சி நடந்தது. இதைத்தொடர்ந்து, சந்திர சூடேஸ்வரர் கோவிலில் தினமும் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்து வருவதால், ஓசூர் மட்டுமின்றி, கர்நாடகா பகுதியில் இருந்து கூட பக்தர்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.
அவ்வாறு வரும் பக்தர்கள், தங்களது வாகனத்திலேயே மலை மீது வரும் வகையில், சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து துவங்கும் இச்சாலையில், ஒரு மாதத்திற்கு முன், பல்வேறு பணிகளுக்காக குழி தோண்டப்பட்டது.ஆனால், இன்று வரை பணியை முடிக்காமல் இழுத்தடித்து வருவதால், வாகனங்களில் வரும் பக்தர்கள் மட்டுமின்றி, நடந்து செல்லும் பக்தர்களும் அபாயகரமான குழியை தாண்டி செல்ல வேண்டியுள்ளது. சில நேரங்களில், பக்தர்கள் சிலர் குழிக்குள் தவறி விழுந்து படுகாயம் அடையும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.

சந்திரசூடேஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா ஏற்பாடுகள் நடந்து வரும், வேளையில், கோவிலுக்கு செல்லும் சாலை முன் தோண்டியுள்ள குழியை, உடனடியாக மூட வேண்டும் என, ஹிந்து சமய அறநிலையத்துறை அலுவலர்களுக்கு, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீரங்கம்; பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதும், 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானது ஸ்ரீரங்கம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; மழை ஓய்ந்து, வெயில் அடிக்க தொடங்கியதால் பவுர்ணமி கிரிவலம் செல்ல, திருவண்ணாமலையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர், பெரியகோவிலில் மாததோறும் பவுர்ணமி நாளில் வலம் நடந்தது. கடந்த சுமார் ஆறு ... மேலும்
 
temple news
சபரிமலை; ஐப்பசி மாதப்பிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறந்தது. கார்த்திகை ஒன்றாம் தேதி ... மேலும்
 
temple news
தூத்துக்குடி; பவுர்ணமியையொட்டி நேற்று இரவு திருச்செந்துார் கோயில் கடற்கரையில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar