ராசிபுரம்:மாசி சிவராத்திரி விழாவை முன்னிட்டு, ராசிபுரம் தர்ம ரஷன ஸமதி சார்பில், பிப்ரவரி, 17ம் தேதி, 108 சிவலிங்க பூஜை, கன்னட சைனிகர் திருமண மண்டபத்தில் நடக்கிறது.அதில், பூஜ்ய ஸ்வாமி தயானந்த சரஸ்வதி ஸ்வாமி ஆசியுடன், பூஜ்ய ஸ்வாமி ஓங்காரானந்தா தலைமையில், 108 சிவலிங்க பூஜை நடக்கிறது. அன்று, மாலை, 6 மணி முதல், இரவு, 9 மணி வரை நடக்கிறது. தொடர்ந்து மறு நாள் காலை, 6 மணி வரை, ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை தர்மரஷன ஸமிதி விழாக்குழுவினர் செய்துள்ளனர்.