திருவாரூர்: திருவாரூர் தியாகராஜர் கோவிலில் 18 ம் ஆண்டு மகாசிவராத்திரி விழாவை முன்னிட்டு நடந்த மூன்றாம் நாள் நாட்டியாஞ்சலி விழாவில் சென்னை, ஐதரபாத், கோவை, கேரளா கஞைர்களின் நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. திருவாரூர் தியாகராஜர் கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு ஆண்டு தோறும் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடந்து வருகிறது. நாட்டியாஞ்சலி மூன்றாம் நாள் நிகழ்ச்சியில் தொழிலதிபர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். நாகை கலெக்டர் அலுவலக கணக்கு அலுவலர் நிதேதிகா குத்து விளக்கேற் றினார். பாங்க் ஆப் பரோடா சுவாமிநாதன் தொழி ல திபர் நந்தகோபால் நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். 6.30 மணிக்கு துவக்கிய நிகழ்ச்சி இரவு 10.10 மணி வரை நடந்தது. இதில் சென்னை சஞ்சனா, ஐ தரபாத் சித்ரா, சென்னை மிருதுளா,கோவை தாரா, சென்னை டிவன் அகடாமி மற்றும் சிவானந்த கலாலயம் குழுவினர்களின் பரதநாட்டியமும், கேரளா மாநிலம் திருச்சூர் மாளவிகா நாயரின் மோகினி ஆட்டமும் நடந்தது.