கண்டாச்சிபுரம்: கெடார் முத்தாலம்மன் கோவிலில் தெப்பல் உற்சவம் நடந்தது. கெடார் முத்தாலம்மன் கோவிலில் நடந்து வரும் உற்சவத் திரு விழாவின் இறுதி நாளான நேற்று முன் தினம் இரவு முத்தாலம்மன் கோவில் குளத்தில் தெப்பல் உற்சவம் நடந்தது. காலை 7 மணிக்கு அம்மனுக்கு சி றப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. அன்னதானம் வழங்கினர். இரவு 12 மணியளவில் தெப்பல் உற்சவம், சுவாமி வீதியுலா நடந்தது. கெடார் மற்றும் சுற்றியுள்ள கிராமத் திலிருந்து பக்தர்கள் சுவாமிகளை வழிபட்டனர்.