கம்மாபுரம்: கம்மாபுரம் அடுத்த கோபாலபுரம் பெரியாண்டவர் அங்காள பரமேஸ்வரி கோவில் தீ மிதி திருவிழா, கொடியேற்றத்துடன் துவங்கியது. இதை முன்னிட்டு, நேற்று காலை 7:00 மணிக்கு அபிஷேக ஆராதனை, இரவு 7:00 மணியளவில் கொடியேற்றம், காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. தினமும் காலை 8:00 மணிக்கு அபிஷேக ஆராதனை, மாலை 4:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிக்கிறார். இரவு 7:00 மணிக்கு அங்காளம்மன் பிறப்பு வளர்ப்பு கதைப் பாட்டு நடக்கிறது. இன்று (17ம் தேதி) இரவு 7:00 மணியளவில் மகா சிவராத்திரி பெரியநாயகி பிறப்பு கதைப் பாட்டு, நாளை (18ம் தேதி) மாலை 3:00 மணியளவில் குடல் பிடுங்கி அம்மன் வீதியுலா, இரவு 7:30 மணியளவில் மயானக் கொள்ளை நடக்கிறது. வரும் 24ம் தேதி காலை 8:00 மணிக்கு அம்மனுக்கு அபிஷேக ஆராதனை, மாலை 4:00 மணியளவில் தீமிதி திருவிழா, அம்மன் வீதியுலா நடக்கிறது.