சிவராத்திரி நாளில் அனைவரும் கண் விழித்திருக்க வேண்டும் என சிவமகா புராணம் கூறுகிறது. அதில் சிவபக்தன் ஒருவன் கண்களுக்கு உபதேசம் செய்வதாக ஒரு ஸ்லோகம் இருக்கிறது. ஓ! கண்களே! சிவராத்திரி என்னும் இந்த உயர்ந்த புண்ணிய காலம் வரப்போகிறது. ஏமாந்து விடாதீர்கள். ஜாக்கிரதையாக விழித்துக் கொண்டிருங்கள். அப்படி நீங்கள் இருந்தீர்கள் என்றால், உங்களுக்கு ஞானம் என்னும் நல்ல நண்பன் கிடைப்பான், என்பதே அதன் பொருள். இங்கு சிவனுக்குரிய நெற்றிக்கண்ணான ஞானக்கண் இப்படி குறிப்பிடப்பட்டுள்ளது.