Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பெரியவரும் மரகதலிங்கமும்! உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பழசை நினைச்சு பாருங்க!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 பிப்
2015
02:02

சிவராத்திரியை ஒட்டி பழைய கதை ஒன்றைக் கேட்போமே! மனப்பூர்வமான விருப்பங்கள் நடை பெறுமா என்றால் கட்டாயம் நடக்கும்; ஒவ்வொரு ஜீவ ராசியும் நம்மை சேர்ந்தவர்களே என்று மனத்தில் நிறுத்தி அன்பே சிவம் என்ற தத்துவத்தில் எழும் ஒவ்வொரு விருப்பமும் நிறைவேறியே தீரும்.பூசலார் நாயனார்  என்றொரு சிவபக்தர். அவர் செல்வந்தர் அல்ல; சிவனுக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்ய  ஆசைப்பட்டார். கோயில் கட்டுவது அவ்வளவு சுலபமா என்ன! பெரும் பணம் வேண்டுமே! எல்லாமே அவனிடம் விட்டு விட்டு, மும்முரமாக கோவில் கட்ட ஆரம்பித்து விட்டார்.

எங்கே? அவருடைய மனத்திலேயே. ஒவ்வொரு நாளும், கற்களையும், தேவையான மற்ற பொருட்களையும் மானசீகமாக கொண்டு வந்து, மதில் சுவர் எழுப்பி, குளம் வெட்டி, ஆவன காரியங்களை முறையாக செய்ய ஆரம்பித்தார். இதுவரை நடந்த கட்டடத்தையும் தானே ஒவ்வொரு நாளும் மேற்பார்வை செய்தார். கோயில் எல்லா விதத்திலும் தயார் ஆனவுடன், பஞ்சாங்கத்தைப் பார்த்து, கும்பாபிஷேகத்திற்கு நாளும் பார்த்து விட்டார். இந்தப்பணியில் அவருக்கு ஒரு இடையூறும் வரவில்லை.

அதே சமயத்தில் அந்த பிரதேச ராஜா ராஜ சிம்ம பல்லவன், காஞ்சிபுரத்தில், கோயில் கட்டிக் கொண்டிருந்தார். அவரும் கும்பாபிஷேகத்திற்கு நாள் குறித்து இருந்தார். அதற்கு முன், ஒரு இரவில் சிவபெருமான் அரசனின் கனவில் தோன்றி, நீ கும்பாபிஷேகத்திற்கு குறித்த நாளை தள்ளிப்போடு, ஏனென்றால் அதே நாளில், உன் பிரஜையான என்னுடைய இன்னொரு பக்தன், பூசலார், எனக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்கிறான்; அங்கே நான் சென்றாக வேண்டும், என்றார்.மன்னன் கனவிலிருந்து விழித்தார். ஒன்றும் விளங்கவில்லை; யார் இந்த பூசலார் என்பதை அறிய,  ஆட்களை அனுப்பி  தேடினார்.  கடைசியில், பூசலார் என்று ஒரு சாமானியர் திருநின்றவூரில் இருப்பதாக ஒரு ஊழியர் கூறியதைக் கேட்டு, அவரை சபைக்கு அழைத்து வர ஆணையிட்டார். கும்பாபிஷேக நாள் நெருங்கி விட்டதால், என்னால் சபைக்கு வர முடியவில்லை. மன்னிக்கவேண்டும், பிறகு வருகிறேன், என்று சொல்லிவிட்டார். இதைக் கேட்ட அரசன், அதிர்ச்சியும், கோபமும் அடைந்தாலும், சிவனே கனவில் வந்ததால், பூசலாரை நேரே பார்க்க சென்றார்.

பூசலார் எப்பொழுதும் அமர்ந்து தியானிக்கும் இலுப்பை மரத்தடியில் கண் திறந்து பார்க்கும் பொழுது, அரசரையும் அவருடன் சேர்ந்த மனிதர்களையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார். . நீ கோயில் கட்டுகிறாயாமே? மன்னிக்கவும்....நீங்கள் கட்டுவது மாதிரி ஒரு கோயிலை நான் கட்டவில்லை. என் மனதிற்குள் கோயில் கட்டியிருக்கிறேன். நாளை கும்பாபிஷேகம். அதற்கான பணி நடந்து கொண்டிருக்கிறதுஅரசருக்கு கண்கள் திறந்தன. ஆழ்ந்த பக்தி இருந்தால், மனத்திலே கோயில் காட்டலாம்; சிவன் கனவில் வந்தது நிஜம் தான், என்று உணர்ந்து, அரசரும், அவருடன் சேர்ந்தவர்களும் பூசலார் நாயனாரின் மானசீக கும்பாபிஷேகத்திற்கு கலந்து கொண்டு, சிவனின் ஆசிகளைப் பெற்றனர்.சிவராத்திரி விரதம் என்பது ஒரே நாளில் முடிந்து விடுவதல்ல. எல்லா நாளையும் சிவராத்திரியாகக் கருதி  வாழ்ந்தால், சிவன் நம் மனக்கோயிலில் நிரந்தரமாக குடி வந்து விடுவார்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar