மதுரை நேதாஜி சாலையில் உள்ளது சுந்தரர் மடம் என அழைக்கப்படும் முருகன் கோயில். இங்கு மூலவவர் தண்டபாணி வடக்கு பார்த்தபடி கையில் தண்டாயுதம், வேல், சேவற் கொடி தாங்கிக் காட்சி தருகிறார். இக்கோயிலைச் சுற்றியுள்ள கடைக்காரர்கள் தினமும் கடை சாவியை தண்டபாணி திருவடியில் வைத்து வணங்கி, பிறகு எடுத்துச் சென்று கடையைத் திறக்கின்றனர். இப்படிச் செய்வதால் வியாபாரம் நன்கு நடக்கிறதாம்.