மன்னார்குடியை அடுத்த பாமணி கிராமத்தில் நாகநாதர் கோயில் உள்ளது. தினமும் இருவேளைகளில் இங்குள்ள புற்றுமண் லிங்கத்திற்கு எந்தவித கவசமும் சாத்தாமல் அபிஷேகம் நடக்கிறது. சுமார் 1500 ஆண்டுகளுக்கும் மேலாகியும் இந்த சுயம்புலிங்கம் சிறிதளவும் கரையாமல் இன்றும் காட்சியளிப்பது வியப்பு!