பதிவு செய்த நாள்
18
பிப்
2015
01:02
சென்னை: சென்னை நகர் முழுவதும் உள்ள அனைத்து சிவாலயங்கள், அம்மன் கோவில்கள், விநாயகர் மற்றும் சுப்பிரமணியர் கோவில்களில், மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது.
பெசன்ட் நகர் ரத்னகிரீஸ்வரர் கோவிலில் நேற்று அதிகாலை முதல், சிறப்பு ஹோமங்கள், ருத்ர மகன்யாசம் உள்ளிட்டவை நடந்தன. கோவில் வழிபாடுகள் அனைத்தும், இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டன.
பாரிமுனை ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் நேற்று வெள்ளி ரத வீதியுலா நடந்தது.
சென்னமல்லீஸ்வரர் கோவில், தண்டையார்பேட்டை மற்றும் சவுகார்பேட்டை அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்றது.
கொத்தவால்சாவடி கன்யகாபரமேஸ்வரி கோவிலில் உள்ள மரகத லிங்கத்திற்கு நான்கு கால பூஜை நடந்தது. பக்தர்கள், 1,008 அகல்விளக்குகளாலான சிவலிங்கத்தை வடிவமைத்து, கோவில் முழுக்க விளக்குகளை ஏற்றினர்.
திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில், பள்ளிக்கரணை ஆதிபுரீஸ்வரர் கோவில், சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோவில்களில், சிறப்புவழிபாடுகள் நடந்தன.
மணிமங்கலம் தர்மேஸ்வரர் கோவிலில், 9,008 தீபங்கள் நேற்று ஏற்றப்பட்டன.