வடமதுரை : வடமதுரை மாரியம்மன் கோயில் மாசித்திருவிழா நாளை (பிப்.21) பூத்தமலர் பூச்சொரிதலுடன் துவங்குகிறது. நாள்தோறும் மின் அலங்கார ரதத்தில் அம்மன் வீதியுலா வருவார். மார்ச் 1ல் அம்மன் சாட்டுதலும், மார்ச் 3 முதல் 7 வரை அம்மன் ஊர் விளையாடல் நிகழ்ச்சியும் நடைபெறும். மார்ச் 8ம் தேதி இரவு பக்தர்கள் பூக்குழியில் இறங்கி, நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியும், மார்ச் 9ல் அக்கினிச்சட்டி, மாவிளக்கு எடுத்தல், பொங்கல் வைத்தலும் நடக்கிறது. மார்ச் 10ல் முளைப்பாரி எடுத்தல், மஞ்சள் நீராடுதலுடன் விழா நிறைவடைகிறது. ஏற்பாட்டினை கோயில் தக்கார், பொதுமக்கள் செய்து வருகின்றனர்.