மூங்கிலணை காமாட்சி கோயில் விழா: கேமிரா மூலம் கண்காணிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20பிப் 2015 12:02
தேவதானப்பட்டி : தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில் திருவிழா 12 கண்காணிப்பு கேமிராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில் மாசி திருவிழா நடந்து வருகிறது. இதற்காக போலீசார் பாதுகாப்பு பணியை தீவிரப் படுத்தி உள்ளனர். அசம்பாவிதங்கள் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக தேவதானப்பட்டி பஸ் ஸ்டாண்ட், அரிசிக்கடை பஸ் நிறுத்தம், கோயில் வளாகம், மஞ்சளாற்றங்கரை, தற்காலிக பஸ் ஸ்டாண்ட், தற்காலிக கடைகள் என 12 இடங் களில் கண்காணிப்பு பணிக்காக சிசிடிவி காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கோயில் செல்லும் தனியார் வாகனங்கள் அனைத்தும் தேவதானப்பட்டியில் இருந்து மஞ்சளார் செல்லும் வழித் தடத்திலும், கோயிலில் இருந்து வெளியேறும் வாகனங்கள் அனைத்தும் புல்லக்காபட்டி அருகே உள்ள அய்யர் பங்களா வழியாகவும் திருப்பி விடப்பட்டுள்ளன.