திருப்பூர் : அவிநாசிபாளையம், புதுப்பாளையத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீவீரமாத்தி அம்மான் கோவில் மகா கும்பாபிஷேக விழா, இன்று காலை 9.50 முதல் 10.30 மணி வரை நடக்கிறது. திருப்புக்கொளியூர் வாகீசர் மடாலயம் காமாட்சிதாச சுவாமிகள் தலைமை வகிக்கிறார். ஆனைமலை ஆர்ஷ வித்யாபீடம் ததேவானந்த சரஸ்வதி சுவாமிகள் முன்னிலை வகிக்கிறார். கும்பாபிஷேக விழா கடந்த 17ம் தேதி துவங்கியது. கடந்த 18ம் தேதி முதற்கால வேள்வி துவங்கியது. நேற்று, இரண்டாம், மூன்றாம் கால வேள்வி நிறைவு பெற்று, கோபுர கலசம் வைக்கப்பட்டது. இன்று காலை 6.30 மணிக்கு விநாயகர் பூஜை, நான்காம் கால வேள்வி, நிறைவேள்வி நடக்கிறது. திருக்குடங்கள் உலா வருதல் காலை 9.20 மணிக்கு நடக்கிறது. தொடர்ந்து, விமான கும்பாபிஷேகம், திருக்குட நீராட்டு காலை 10.00 மணிக்கும்; பரிவாரங்கள் கும்பாபிஷேகம் காலை 10.50 மணிக்கும் நடக்கிறது. அதைத்தொடர்ந்து அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை, பக்தர்களுக்கு அன்னதானம் காலை 12.00 மணி முதல் வழங்கப்படுகிறது.