பதிவு செய்த நாள்
20
ஜூன்
2011
10:06
ஈரோடு: ஈரோடு மாவட்டம் சிவகிரி, பூலாங்காட்டில் உள்ள பழப்பூசய்யன் கோவிலின் கும்பாபிஷேக விழா இன்று (20ம் தேதி) நடக்கிறது. முன்னதாக, கோவிலில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. நேற்று, காலை 9.30 மணிக்கு காவேரி தீர்த்தம் கொண்டு செல்லுதல் நிகழ்ச்சியும், மாலை 3.30க்கு சிவகிரி வேலாயுதசாமி கோவிலில் இருந்து தீர்த்தம், முளைப்பாரி அழைத்து வருதலும், மாலை 5.30க்கு விநாயகர் வழிபாடு, மஹாசங்கல்பம், வாஸ்து சாந்தி, கலாகர்சனம் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது. இன்று காலை 5 மணிக்கு, இரண்டாம் கால யாக பூஜை, ஸ்பர்சாகுதி, நாடிசந்தானம், பூர்ணாகுதி, தீபாராதனை போன்ற சிறப்பு பூஜைகள் நடக்கிறது. காலை 6 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. பக்தர்களுக்கு 7.30க்கு அன்னதானம் நடக்கிறது.