திட்டக்குடி : திட்டக்குடி அடுத்த ஆலத்தியூர் மகா கணபதி கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதனை முன்னிட்டு கடந்த 16ம் தேதி மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை விக்னேஷ்வர பூஜை, வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. 17ம் தேதி காலை 6 மணிக்கு கணபதி ஹோ மம், நவக்கிரக ஹோமம், மாலை 5 மணிக்கு கோ பூஜை, யாகசாலை பிரவேசம், முதல் கால யாக பூஜை, நாளை 18ம் தேதி காலை 7 மணி முதல் இரண்டாம் கால யாகசாலை பூஜை, மாலை 5 மணிக்கு மூன்றாம் கால யாக சாலை பூஜை நடந்தது. நேற்று (19ம் தேதி) காலை 5 மணிக்கு நான் காம் கால யாக சாலை பூஜை, கடம் புறப்ப டுதல், காலை 11 மணி முதல் பகல் 12 மணி வரை மகா கும்பாபி ஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.