பதிவு செய்த நாள்
20
ஜூன்
2011
10:06
சிதம்பரம் : சிதம்பரத்தில் சிறை மீட்ட விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 17ம் தேதி யாகசாலை பூஜைகள் துவங்கியது. காலை முதல் கால பூஜையுடன் அஷ்டபந்தன பூஜை, வடுக பூஜை, தீபாராதனை, விசேஷ ஹோமம் நடந்தது. 18ம் தேதி காலை இரண்டாம் கால யாக பூஜையும், ஸ்ரீவித்யா மந்த்ர ஜபம், கன்யாபூஜை, ருத்ர ஹோமம், மாலை மூன்றாம் கால யாகசாலை பூஜையும் நடந்தது. கும்பாபிஷேக தினமான நேற்று காலை விசேஷ பூஜைகள் முடிந்து 10 மணிக்கு கடம் புறப்பாடும் அதனைத் தொடர்ந்து 10.35க்கு விமான கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகமும், தொடர்ந்து பரிவார மூர்த்திகள், மூலவர் கும்பாபிஷேகமும் நடந்தது. சிதம்பரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கில் பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். மாலை மகா கணபதி ஹோமமும், இரவு விநாயகர் வீதியுலாவும் நடந்தது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் ரத்தினசாமி, பாலசுப்ரமணியம், பார்த்தசாரதி, வக்கீல் சூரியநாராயணன் ஆகியோர் செய்திருந்தனர்.