முருகன் குன்றம் கோயிலை தேவசம்போர்டு எடுக்க எதிர்ப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21பிப் 2015 12:02
நாகர்கோவில்: கன்னியாகுமரியை அடுத்த பழத்தோட்டம் அருகே முருகன்குன்றம் வேல்முருகன் கோயில் உள்ளது. பழமை வாய்ந்த இந்த கோயிலில் சித்ரா பவுர்ணமி நாளில் நடைபெறும் நிலாச்சோறு நிகழ்ச்சி மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த கோயிலை தனியார் டிரஸ்ட் ஒன்று நிர்வகித்து வரும் நிலையில் இந்த கோயிலை தேவசம்போர்டு நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக டிரஸ்ட் நிர்வாகிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இப்பகுதி பக்தர்கள் நேற்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பா.ஜ., மற்றும் இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.