திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், கீழையூர் வீரட்டானேஸ்வரர் கேவிலில் மாசிமக பெருவிழா வரும் 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.அன்று காலை 6 மணிக்கு சிறப்பு பூஜைகளுடன், வேதமந்திரம் முழங்க கொடியேற்று விழா நடக்கிறது. 27ம் தேதி காலை 7.30 மணிக்கு அதிகார நந்தி வீதிபுறப்பாடு, இரவு பஞ்சமூர்த்திகள் ரிஷப வாகனத்தில் வீதியுலா நடக்கிறது.29ம் தேதி இரவு 7.00 மணிக்கு சிவானந்தவல்லி சமேத வீரட்டானேஸ்வரர் திருக்கல்யாண வைபவம், இரவு முத்துப்பந்தல் வீதியுலா நடக்கிறது. அடுத்த மாதம் 3ம் தேதி காலை 7.30 மணிக்கு மேல் தேரோட்டம் நடக்கிறது. 4ம் தேதி மதியம் 11.00 மணிக்கு தென்பெண்ணையில் தீர்த்தவாரி உற்சவம் நடக்கிறது.