விழுப்புரம்: பிரமோற்சவத்தை முன்னிட்டு குமாரபுரி கிராமத்தில் அமைந்துள்ள அங்காள பரம்மேஸ்வரி கோவிலில் திருத்தேர் விழா நடக்கிறது.விழாவை முன்னிட்டு நேற்றிரவு 7:00 மணிக்கு விமானத்தில் அம்மன் வீதியுலா, இன்று (21ம்தேதி) இரவு 7:00 மணிக்கு பின்னக்கிளையிலும், நாளை (22ம் தேதி) இரவு 7:00 மணிக்கு அம்மன் வீதியுலா நடக்கிறது. 23ம் தேதி மதியம் 3:00 மணிக்கு தேர் திருவிழா, 24ம் தேதி இரவு 7:00 மணிக்கு மஞ்சள் நீர் உற்சவம், வரும் 2ம் தேதி இரவு 8:00 மணிக்கு மகா கும்ப பல்லயம் நடக்கிறது.