மஞ்சூர்: எடக்காடு நடுஹட்டியில் உள்ள துர்கா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.இதனையொட்டி, முதற்கால யாகபூஜை, 108 திரவிய ஆகுதி, தீபாராதனை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, விக்னேஸ்வரா பூஜை, வேதி கார்சனை, இரண்டாம் காலயாக பூஜை, தீபாராதனை நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து, மகா கும்பாபிஷேகம் நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை ஊர் தலைவர் தர்ஜிகவுடர் உட்பட பலர் செய்திருந்தனர்.