Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வீடு கட்டும் பணி விரைவில் ... பெரும்புகைக்கு இவ்ளோ செலவா?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நெஞ்சத்தை அள்ளித்தா!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 பிப்
2015
03:02

உலகின் மையப்புள்ளியாகிய பெத்லகேமில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பரிசுத்த ஆவியினாலே கன்னி மரியாளிடத்தில் ஒரு பாலகன் பிறந்தார். அவர் பிறப்பதற்கு முன்னமே பெயரிடப்பட்டவர். அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை ரட்சிப்பார் என்று கர்த்தருடைய துõதன் அறிவித்தான்.அவர் வாழ்ந்த நாட்களில் ஒருவருக்கும் ஒருபோதும் சிறு தீமைகூட செய்ததில்லை. அந்தளவிற்கு உத்தமராக திகழ்ந்தார். என்னை பாவியென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக்கூடும் என்று சவாலிட்டு எள் அளவேனும் பாவமில்லாத பரிசுத்தராய் வாழ்ந்தார். மேலும், நன்மை செய்பவராகவும் அவர் இருந்தார். நமது பாவங்களுக்காவும், சர்வலோகத்தின் பாவங்களுக்காகவும், சிலுவையில் ரத்தம் சிந்தி, வேத வாக்கியங்களின்படி மரித்தார்.நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்கு பிழைத்திருக்கும்படி இயேசு தாமே தம்முடைய சரீரத்தில் நம்முடைய பாவங்களை சிலுவையின் மேல் சுமந்து தீர்த்தார். நாம் பாவிகளாக இருந்தும், கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே தேவன் நம்மேல் வைத்த அன்பை விளங்கச் செய்தார். வேத வாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார். இதனை இயேசு, மரித்தேன் ஆனாலும் சதாகாலமும் உயிரோடே இருக்கிறேன் என்கிறார். மரணத்தையும், பாதாளத்தையும்,சகலத்தையும் ஜெயித்து உயிர்த்தெழுந்து இன்றும் உயிரோடிருக்கிறவரும், தேவகுமாரனுமாகிய இயேசு இந்த உலகத்தையும், பூமியையும், மக்களையும், சத்தியத்தோடும், நிதானத்தோடும் நீதியாய் நியாயம் தீர்க்க வருவார். இதோ சீக்கிரமாய் வருகிறேன்.அவனவனுடைய கிரியைகளின்படிஅவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடு கூட வருகிறது, என்று அவர் சொல்லியிருக்கிறார்.மனிதன் ஒரே தரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்பு அடைவதும் அவனுக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது. சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது, தீமைக்காவது தக்க பலன் அடையும்படிக்கு நாமெல்லோரும் கிறிஸ்துவின் நியாசனத்திற்கு முன்பாக ஒருநாள் நிற்க வேண்டி வரும். உங்களை நேசிக்கும் இயேசு, மகனே! மகனே! உன் இதயத்தை எனக்கு தா. நான் உன்னில் வந்து வாசம் பண்ண விரும்புகிறேன், என விருப்பம் தெரிவித்து அழைக்கிறார். அவர் நமது ஜெபத்தைக் கேட்டு பாவத்தை மன்னித்து நம் உள்ளத்தில் வந்து வாசம் பண்ணுவார். நீங்கள் யாராக இருந்தாலும், எந்த நிலைமையில் இருந்தாலும் உங்கள் இருளை வெளிச்சமாக்கி வாழ்க்கையை பிரகாசப்படுத்தி அனேகருக்கு ஆசீர்வாதமாக்குவார். ஆகவே, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசியுங்கள். அப்போது நீங்களும் உங்கள் வீட்டாரும் பாவத்திலிருந்தும், வியாதிகளிலிருந்தும் பிரச்னைகளிலிருந்தும் விடுதலையாகி ரட்சிக்கப்படுவீர்கள்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar