மனிதனின் தகுதி அறிந்தேகடவுள் அருள்புரிகிறார். அவரது அருளுக்குத் தகுதிப்படுத்திக் கொள்வது நமது பொறுப்பு. மனம் ஒரு கண்ணாடி. அதன் மீது தீய எண்ணம் என்னும் துõசி படியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.கடவுளை முழுமையாகநம்பினால், நேர்மையான சூழலை அவரே அமைத்துக் கொடுத்து துணைபுரிவார். கடவுளிடம் கேட்டதெல்லாம் கிடைத்து விடும் என்று எதிர்பார்ப்பது மனிதனின்அறியாமையின் வெளிப்பாடே.இப்படி இருந்து விட்டேனே என்று வருந்த வேண்டாம். இன்று முதல் இப்படிமாறுவேன் என்று சிந்திப்பதே ஆனந்தத்தை வரவழைக்கும். நேற்றைய சுமையை இன்று சுமக்காதே. தவறுகளைத் திருத்திக் கொண்டு முன்னேறிச் செல்வதற்கான முயற்சியில் உடனே இறங்கு. உண்மை இருக்கும்இடத்திலேயே கடவுள் இருப்பார்.
சத்தியம் தவறாத உத்தமர்களுக்கே கடவுளின் அருள் பூரணமாக கிடைக்கும். நீங்கள் உத்தமர் தானா என்பதை நீங்கள் பேசும் உண்மையின் அளவை வைத்தே கணக்கிட்டுக் கொள்ளுங்கள். விடாமுயற்சி உன்னிடம் இருந்து விட்டால், பாறாங்கல் போன்ற தடையும் கூட தகர்ந்து துõள் துõளாக நொறுங்கி விடும். நேர்மை, நீதி, நியாயம், அடக்கம், வீரம் போன்றநற்குணங்களின் எடுத்துக் காட்டாக மனிதன் மாற வேண்டும். அப்போது வெற்றி ஒருவன் பக்கத்தில் காத்திருக்கும். எண்ணம், சொல்ஆகியவற்றில் மட்டும் தர்ம சிந்தனை இருந்தால் போதாது. செயல் முறையில் தர்மத்தைக் கடைபிடிப்பதே சிறந்தது. புதுமலர் போல மனம் திறந்த நிலையில் வெளிப்படையாக இருக்க வேண்டும். அதில் எப்போதும் சமத்துவம், கருணை வெளிப்பட வேண்டும். மலருக்குரியநறுமணம், அழகு, வெளிப்படையான தன்மைகளை மனிதன் பெற்று விட்டால்உலகமே மகிழ்ச்சிக்கடலில் திளைக்கும். அமைதி உள்ளத்தில் இருக்குமானால், எந்தப் பணியையும் சிறப்பாகச் செய்ய முடியும். ஆர்வமுடன் பணியாற்றினால் மன வலிமையும் அதிகரிக்கும். பிறர் விஷயத்தில் தலையிட வேண்டாம். உன்னைக் கேட்காத சமயத்தில் கூட அபிப்ராயம் சொல்லும் பழக்கத்தை கை விட்டு விடு.பிரார்த்தனையோடு நம்பிக்கை, நேர்மை ஆகியவையும் சேர்ந்து விட்டால், ஒருவன் கேட்பதைக் கடவுளால் கொடுக்காமல் இருக்க முடியாது. வாழ்வின் உண்மையான நோக்கம் கடவுளுக்காக வாழ்தல். அதாவது உண்மைக்காக வாழ்வது தான். மனதை ஒருமுகப்படுத்தும் திறனை வளர்த்துக் கொள். வாழ்வில் எதையும் சாதிக்கும் வல்லமையைப் பெற்று விடுவாய்.முன்னேறுவதற்காகவே நீ பிறந்திருக்கிறாய். மதிப்பு மிக்க இந்தப்பிறவியைச் சரியாக பயன்படுத்திக் கொள்.ஒருபோதும் கோபப்படாதே. அமைதியும், பொறுமையும் உன்னிடத்தில் ஆட்சிபெற்றிருக்கட்டும். கடவுளிடம் முழுமையாக உன்னை அர்ப்பணித்து விடு. அழகும், எளிமையும், அமைதியும் உன்னுள்எப்போதும் குடியிருக்கும். உன் குறையை நேருக்குநேராகப் பார்க்க கற்றுக் கொள். உடனுக்குடன் திருத்திக் கொள்ளவும் முயற்சி செய். சிறிய லட்சியத்தில் வெற்றி பெறுவதை விட, பெரியலட்சியத்திற்காக முயற்சி செய்து தோல்வி அடைவது மேலானது. (மகான் ஸ்ரீஅன்னை)