பதிவு செய்த நாள்
23
பிப்
2015
12:02
நகரி: சதாசிவனேஸ்வரர் கோவிலில், மூன்று நாட்கள் நடந்த சிவராத்திரி திருவிழாவில், பக்தர்கள், 8.93 லட்சம் ரூபாயை உண்டியலில் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். சித்துார் மாவட்டம், புத்துார் - ரேணிகுண்டா செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், சதாசிவனேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், கடந்த, 17ம் தேதி முதல், நேற்று முன்தினம் வரை, சிவராத்திரி உற்சவம் கொண்டாடப்பட்டது. இதில், பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற, அங்குள்ள உண்டியலில் காணிக்கை செலுத்தினர். நேற்று, கோவில் அதிகாரி சுப்ரமணியம் முன்னிலையில், உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இதில், 8,93,653 ரூபாய் ரொக்கம், கோவிலுக்கு வருவாய் கிடைத்துள்ளது.