கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், மஹா சிவராத்திரி விழாவையொட்டி, திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது.கிருஷ்ணகிரி, பழையபேட்டை குப்பம் ரோட்டில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மஹா சிவராத்திரி திருவிழா நடந்து வருகிறது. விழாவையொட்டி இரு தினங்களுக்கு முன் இரவு தீ மிதி விழா நடந்தது.நேற்று முன்தினம் அம்மனுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதில், சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும், மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியும் நடந்தது. இரவு அர்ஜூணன் தபசு நாடகம் நடந்தது. நேற்று கும்ப பூஜையும், அதைத் தொடர்ந்து கொடி இறக்குதல் நிகழ்ச்சியும் நடந்தது.