கும்பகோணம்-காரைக்கால் சாலையில் உள்ளது. சிறுகுடி-இறைவன்-மங்களநாதர்; இறைவி-மங்களநாயகி. இவர்களுக்கு இடையே மங்களனாகிய அங்காரகன் தெற்கு, திசை நோக்கி அருள்கிறார். செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் செவ்வாய்க்கிழமைகளில் இங்கு வந்து மங்கள தீர்த்தத்தில் நீராடி, அங்காரகனுக்கு பாலாபிஷேகம் செய்து, செவ்வரளி மாலையிட்டு வழிபட்டால் தோஷம் நிவர்த்தியாகி திருமண பாக்யம் கிட்டும் என்பர்.