Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கடன்காரனும் கெட்டவனே! பார்வை இல்லையா! அதுவும் நன்மைக்கே!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இரக்கத்தின் வீடு!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 பிப்
2015
05:02

1856ல், இங்கிலாந்து ராணி விக்டோரியா, புதைபொருள் ஆராய்ச்சியாளர்களிடம் ஜெருசலேமில் இருந்த ‘பெதஸ்தா’ என்ற குளம் குறித்து ஆராய்ச்சி செய்யுமாறு உத்தரவிட்டார்.யோவான் 5ம் அதிகாரம், 1-15 வசனங்களில் பெதஸ்தா குளம் பற்றிக் கூறப்பட்டுள்ளது. ‘பெதஸ்தா’ என்றால் ‘இரக்கத்தின் வீடு’. ஜெருசேலம் பட்டணத்தில் இருந்த அநேக பிரதான வாசல்களில் ஆட்டுச்சந்தை வாசல் எனப்படும் வாசல் ஒன்றுண்டு. அதன் வெளிப்புறத்தில் தான், இயேசு சிலுவையில் அறையப்பட்ட கல்வாரி மலையும், உட்புறத்தின் ஐந்து மண்டபங்களில் பெதஸ்தா குளமும் இருந்தது. மக்களுக்காக ஒரு ஆட்டைப் போன்று, வதை பட்டு உயிரைத் தியாகம் செய்வதற்காகத் தான், அந்த ஆட்டுவாசலை இயேசு முன்னதாகவே தேர்ந்தெடுத்து வைத்திருந்தார் எனலாம். அந்த ஐந்து மண்டபங்களில் இருந்த ஐந்து வகை மனிதர்களை, சபைகளில் இருக்கும் ஐந்து விதமான மக்களுக்கு உவமையாக யோவான் கூறுகிறார். அந்தக் குளம் கலங்கும்போது, யார் ஒருவர் முந்திக் குளத்தில் இறங்குவாரோ அவர் எப்படிப்பட்ட வியாதியஸ்தனாக இருந்தாலும், குணமாகி விடுவார் என்று ஒரு ஐதீகம். அன்றைய கால கட்டத்தில் ஒருவன் இரட்சிக்கப்பட வேண்டுமானால், அவன் தன் கிரியைகளில் அதைக் காட்ட வேண்டும். இயேசு கிறிஸ்துவோ, தன்னை விசுவாசிக்கிறவன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும் இரட்சிக்கப்படுவான் என்று அங்கு நிரூபித்தார்.38 வருடம் வியாதியாயிருந்த ஒரு மனுஷனை அங்கே சந்தித்து குணமாக்குகிறார். இன்றைக்கும் அவர், பொறுமையாக, குணமடைய வேண்டும் என்ற சிந்தனைகளோடு இருப்பவரைக் குணமாக்க வருகிறார். நாம் அவரோடு உரையாடத் தயாராக இருந்தால், அவர் உதவிடத் தயாராக இருக்கிறார்.மூன்று வருடத்திற்குப் பிறகு புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள், 1138ல் நடந்த சிலுவைப் போரின் போது, பெதஸ்தா குளம் அருகேயிருந்த ‘புனித ஆனி’ தேவாலயத்தை இடித்தபோது, பெதஸ்தா குளம் மூடப்பட்டு விட்டது தெரிய வந்தது. பின்பு மகாராணியின் உத்தரவின்படி, துõர்ந்து போன பெதஸ்தா குளம் புதுப்பிக்கப்பட்டது. தேவ ஆலயமும் கட்டப்பட்டது. ஆனால், அந்தக் குளத்தில் நடந்த அற்புதத்தை விட, பெரிய அற்புதங்களை நம் வாழ்வில் நிகழ்த்த இயேசு தயாராக இருக்கிறார். அவரின் கட்டளையை கடைபிடித்து ஆசிர்வாதத்தைப் பெறுவோமாக!

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar