லாலாப்பேட்டை: லாலாப்பேட்டை அடுத்துள்ள கள்ளிப்பள்ளி கொடிக்கால் ஸ்ரீ பகவதி அம்மன் கோயில் வைகாசி திருவிழா நேற்று நடந்தது. லாலாப்பேட்டை அடுத்துள்ள கள்ளிப்பள்ளி கொடிக்கால் ஸ்ரீ பகவதி அம்மன் கோயிலில் கடந்த 19ம் தேதி பகவதி அம்மனுக்கு அபிஷேகம் பக்தர்கள், காவிரியாற்றில் இருந்து தீர்த்த குடம் எடுத்து சென்றனர். நேற்று அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் மஹா தீபாராதனை நடந்தது. லாலாப்பேட்டை, கள்ளப்பள்ளி, சிந்தலவாடி ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அம்மனை வழிப்பட்டனர். திருவிழாவின் போது லாலாப்பேட்டை விஷன் டிரஸ்ட் நிறுவன தலைவர் சுரேஷ் தலைமையில் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டது. கோயில் நிர்வாகம் சார்பில் கிராமிய நடன நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை லாலாப்பேட்டை ஊர்ப்பொதுமக்கள் செய்திருந்தனர்.