பதிவு செய்த நாள்
21
ஜூன்
2011
11:06
பொங்கலூர் : பொங்கலூர், புதுப்பாளையம் வீரமாத்தி அம்மன் கோயிலில் நேற்று மகா கும்பாபிஷேக விழா நடந்தது. பொங்கலூர் அருகே புதுப்பாளையத்தில் வீரமாத்தியம்மன் கோயில் உள்ளது; இது, செங்குந்தர் வம்சத்தினருக்கு குல தெய்வம். இக்கோயிலில் கோபுரம், மகா மண்டபம், பரிவார மூர்த்திகளுக்கான சன்னதி புதிதாக கட்டப்பட்டன. கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு விநாயகர் பூஜை, வாஸ்து பூஜை நடந்தது. சனிக்கிழமை காலை வேள்வி, திருமகள் பூஜை, கோ பூஜை, மாலையில் முளைப்பாலிகை இடுதல், காப்பணிதல், திரு மறை, திருமறை விண்ணப்பம் பேரொளி வழிபாடு ஆகியன நடந்தன. நேற்று காலை 6.30 மணிக்கு விநாயகர் பூஜை, நாடி சந்தனம், கலாகர்ஷணம், 9.20 மணிக்கு திருக்குடங்கள் உலா வருதல் ஆகி யன நடந்தன. 10.00 மணிக்கு விமான கும்பாபிஷேகம், 10.15 மணிக்கு திருக்குட நீராட்டு, 10.25 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. பின், அன்னதானம் நடந்தது. ஆலய நிர்மாண பணிகளை ஸ்தபதி உதயகுமார் செய்திருந்தார். கும்பாபிஷேகத்தை அவினாசி ஆதினம் காமாட்சிதாச சுவாமி கள், ஆனைமலை ஆர்ஷ வித்யாபீடம் ததேவானந்த சரஸ்வதி சுவாமிகள் ஆகியோர் நடத்தி வைத்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் பொஞ்சி குல வம்சத்தினர் செய்திருந்தனர்.