கடலூர் : நெல்லிக்குப்பம் வஜீர்கான் தெரு முத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வரும் 3ம் தேதி நடக்கிறது. அதனை முன்னிட்டு வரும் 2ம் தேதி காலை 8 மணிக்கு மேல் அனுக்ஞை விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், கோ பூஜை, நவக்கிரக ஹோமம், மாலை 6 மணிக்கு கும்பலங்காரம், ரக்ஷாபந்தனம் நடக்கிறது. 3ம் தேதி காலை 7 மணிக்கு மேல் இரண்டாவது கால யாக சாலை பூஜைகள், நாடி சந்தானம், தத்துவார்ச்சனை, 9 மணிக்கு கும்பாபிஷேகம், 11.15 மணிக்கு சக்தி கரகம் புறப்பாடு நடக்கிறது. 12.30 மணிக்கு சாகை வார்த்தல் நடக்கிறது. 4ம் தேதி மாலை மண்டலாபிஷேகம் துவங்குகிறது.