இப்போது செய்யும் தான தருமங்கள் அடுத்த பிறவியில் பலன் தருமா?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27பிப் 2015 05:02
கண்டிப்பாகப் பலனைத் தரும். அடுத்த பிறவி என்று மட்டுமல்லாமல், அடுத்து வரக்கூடிய பிறவிகளிலும் நமது புண்ணிய பாவங்கள் பலனைத் தரும் எப்படி நாம் வங்கியில் பணத்தைச் சேமித்து வைத்தால், நாம் எப்போது வேண்டுமோ அப்போது பயன்படுத்துகிறோமோ, அதுபோன்று நம்முடைய ஒவ்வொரு காரியமும் கடவுளால் பதிவு செய்யப்பட்டு அதற்கேற்பவே அடுத்த பிறவிகள் ஏற்படுகின்றன.
இதை நாம் புரிந்துகொண்டால்-மிகவும் நல்லவர்கள் சில நேரம் சிரமப்படுவதையும், தவறு செய்பவர்கள் சில நேரம் இன்பம் அடைவதையும் புரிந்துகொள்ளலாம், எனவே, நாம் முற்பிறவியில் செய்தவற்றை மாற்ற இயலாது. குறைந்தது இப்பிறவியில் நமக்குக் கடவுள் அளித்துள்ள இவ்வாழ்க்கையில் நம்மால் முடிந்த அளவுக்கு முழு முயற்சியுடன் நல்ல காரியங்களைச் செய்துகொண்டு வருவோமானால், நமது தீவினைகள் ஏதேனும் இருப்பின் அவை அழிக்கப்பட்டு நல்ல வினைகளின் சேர்க்கையினால் உயர்ந்த பிறப்பை அடுத்த பிறவிகளில் அடைவோம். எப்படி நாளை என்பதற்காக இன்று உழைக்கிறோமோ, அது போன்று அடுத்த பிறவிகளுக்கும் ஒரு நல்வாழ்க்கை அமைத்திட, நாம் நமது வாழ்க்கை அமைப்பை நன்றாக அமைத்துக்கொள்ளல் வேண்டும்.