காரைக்குடி: பலவான்குடி செங்கனி அஞ்சாத பெருமாள், செங்கமலநாயகி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வரும் 4ம்தேதி நடக்கிறது. இந்த கோயிலில் ஐந்து நிலை ராஜகோபுரம் அமைக்கப்பட்டு திருப்பணி நடந்தது. மூலஸ்தானம் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் சன்னதிகள்,விமானங்கள் புதுப்பித்து கொடிமரமும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலில் வரும் 4 ம்தேதி காலை 10.45 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. நாளை காலை வாஸ்துசாந்தி,மாலை 4.15 மணிக்கு அங்குரார்பணம், 2ம் தேதி இரண்டாம் கால பூஜை, 3ம் தேதி காலை 8.45 மணிக்கு நான்காம் கால யாக பூஜை, 4ம் தேதி காலை 10. 30 கடம் புறப்பாடு, 11.00 மணிக்கு விமான மகா கும்பாபிஷேகம், 11.15க்கு மூலவர் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. பூஜை காலங்களில் திருமுறை, பாராயணங்கள் நடக்கிறது. விழாவன்று அன்னதானமும், இரவு அம்மன் வீதியுலாவும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை நாட்டார்கள், நகராத்தார்கள் செய்து வருகின்றனர்.