பதிவு செய்த நாள்
22
ஜூன்
2011
10:06
தூத்துக்குடி : ஆழ்வார்திருநகரி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் கும்பாபிஷேக பெருவிழா வரும் ஜூலை 3ம் தேதி நடக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி டவுன் பஞ்., சில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு வரும் 2ம் தேதி காலை 5.30 மணிக்கு மங்கள இசை, அனுக்கை, யஜமான சங்கல்பம், விநாயகர் பூஜை, புண்யாஹவாசனம், பஞ்சகவ்ய பூஜை, மகாகணபதி ஹோமம், பிரம்மசாரி பூஜை, பூர்ணாஹூதி, தீபாராதனை நிகழ்ச்சிகளும், காலை 10 மணிக்கு நவக்கிரஹ ஹோமம, கோபூஜையும், மாலை 4 மணிக்கு ஆதி நாதருடன் நம்ஆழ்வார் கோயிலில் இருந்து தீர்த்தங்கள் பவனி வந்து ஆலயம் சேர்தலும், மாலை 6 மணிக்கு வாஸ்துசாந்தி, ரக்ஷõ பந்தனம், கும்ப அலங்காரமும், இரவு 7 மணிக்கு யாகசாலை பிரவேசம், முதல் யாக சாலை பூஜை, பூர்ணாஹூதி, தீபாராதனை, பிரசாதம் வழங்குதலும், இரவு 9.40க்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. வரும் 3ம் தேதி காலை 6 மணி முதல் சூர்ய பூஜை, சோம கும்பபூஜை, சகஸ்ரநாம அர்ச்சனை, இரண்டாம் யாகசாலை பூஜை, ஸ்பர்சாஹூதி, தீபாராதனை, யாத்ராதானம் கடம் புறப்பாடும், காலை 10.30க்கு ஸ்ரீமகா கணபதி விமான அபிஷேகம், அங்காள பரமேஸ்வரி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் சதர்ஷனம் தீபாராதனையும், பகல் 12 மணிக்கு 21 வகை திரவியங்களால் மகா அபிஷேக தீபாராதனையும், பகல் 1 மணிக்கு அன்னதானம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.வரும் 4ம் தேதி முதல் மண்டல பூஜை தொடர்ந்து நடைபெறும். ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.