பதிவு செய்த நாள்
22
ஜூன்
2011
10:06
சென்னிமலை: சென்னிமலை முருகன் கோவில் மற்றும் மாரியம்மன், கைலாசநார் கோவில் உண்டியல்கள் மூலம், 4.77 லட்சம் ரூபாய் காணிக்கை வசூலானது. சென்னிமலை சுப்பிரமணிய ஸ்வாமி தேவஸ்தானம் சார்பாக, பல திருக்கோவில்கள் நிர்வகிக்கப்படுகிறது. சென்னிமலை மலை மீதுள்ள முருகன் கோவிலில், பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக, கோவில் உண்டியல், திருப்பணி உண்டியல், அன்னதான உண்டியல் என பல உண்டியல்கள் உள்ளன. இவற்றை திறந்து எண்ணும் பணி நடந்தது. ஆய்வாளர் லட்சுமி, செயல் அதிகாரி பசவராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவில் உண்டியலில் இரண்டு லட்சத்து 89 ஆயிரத்து 591 ரூபாய் ரொக்கம், 55.490 கிராம் தங்கம், 148.630 கிராம் வெள்ளி, திருப்பணி உண்டியலில் 84 ஆயிரத்து 986 ரூபாய் ரொக்கம் இருந்தது. சென்னிமலை கிழக்கு ராஜ வீதியில் உள்ள கைலாசநாதர் கோவில் உண்டியலில் 80 ஆயிரத்து 304 ரூபாய் பணமும், சென்னிமலை காங்கேயம் மெயின்ரோடு மாரியம்மன் கோவிலில் 30 ஆயிரத்து 462 ரூபாய் ரொக்கம், காணிக்கையாக வசூலானது. மொத்தம் நான்கு லட்சத்து 77 ஆயிரத்து 343 ரூபாய் இருந்தது.