பதிவு செய்த நாள்
04
மார்
2015
01:03
காரைக்குடி:காரைக்குடி முத்துமாரியம்மன் கோயில் விழாவையொட்டி, பக்தர்களுக்கு கட்டுவதற்காக 50 ஆயிரம் காப்பு தயாராகி வருகிறது.காரைக்குடி முத்துமாரியம்மன் கோயில் விழா வரும் 10ம் தேதி துவங்குகிறது. காலை 6 முதல் 6.45 மணிக்குள் கொடியேற்றம், அம்பாளுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடக்கிறது. காரைக்குடி,சுற்றியுள்ள பல்வேறு ஊர்களை சேர்ந்தவர்கள் காப்பு கட்டி விரதம் மேற்கொள்வர். கோயில் நிர்வாகம் சார்பில் 50 ஆயிரம் காப்பு தயாராகி வருகின்றன.
10-ம் தேதி தொடங்கும் விழா ஏப்ரல் 16 வரை 40 நாட்கள் நடக்கிறது. மார்ச் 17-ம் தேதி திருக்கோயில் கரகம், மதுக்குடம், முளைப்பாரி இரவு 8 மணிக்கு முத்தாளம்மன் கோயிலிலிருந்து புறப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக கோயிலை வந்தடையும். 18-ம் தேதி காலை 8 மணிக்கு முத்துமாரியம்மன் கோயில் காவடி, பால்குடம், அக்னிசட்டி, அக்னி காவடி, பறவைக்காடி முத்தாளம்மன் கோயிலிலிருந்து புறப்பட்டு, மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயிலை வந்தடைகிறது.
காப்பு கட்டுவதற்குரிய சீட்டு ரூ.5, பால்குடம் ரூ.10, முடி எடுக்க ரூ.10 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏற்பாடுகளை தக்கார் ரோஜாலி சுமதா தலைமையில், செயல் அலுவலர் (பொ) பாலதண்டாயுதம் செய்து வருகிறார்.