Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கடவுள் உள்ளமே கருணை இல்லம்! நாளை என்பது நம் கையில் இல்லை!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
தெய்வம் கூட உருகிப்போகும் தந்தையின் அன்பின் முன்னே!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 மார்
2015
02:03

திருவண்ணாமலையில் வல்லாள மகாராஜன் நல்லாட்சி புரிந்து வந்தான். தங்களுக்கு பிள்ளை இல்லாததை எண்ணி அவன் மனைவியர் மல்லமாதேவி, சல்லமாதேவி வருந்தினர். ஒருநாள் சிவனடியார் ஒருவர் வந்தார். உபசரித்த வல்லாளனிடம், மன்னா! எனக்கு பணிவிடை செய்ய ஒரு பெண் தேவை, என்றார். இதைக் கேட்ட சல்லமாதேவி,மன்னா! நானே பணிப்பெண்ணாகப் போகிறேன், என்றாள்.  மன்னன் அமைதி காத்தான். அன்றிரவு அடியவர் அரண்மனையில் தங்கினார். பணிப்பெண்ணாக இருந்த சல்லமாதேவி அடியவரின் திருவடிகளைப் பிடித்து விட முயன்றாள். ஆனால், அடியவர் மாயமாய் மறைந்து, குழந்தையாக மாறினார். சல்லமாதேவி வியந்து கத்தினாள். வல்லாளன் அங்கு வந்து குழந்தையை அள்ளி எடுத்து மகிழ்ந்தான். ஆனால், குழந்தையும் நொடிப்பொழுதில் மறைந்து போனது. அப்போது, மன்னா! உன் குறை தீர நானே அடியாராகவும், குழந்தையாகவும் காட்சியளித்தேன், என்று அண்ணாமலையாரின் வாக்கு அசரீரியாக ஒலித்தது. சிவனே குழந்தையாக வந்தும், அதை கொஞ்சி மகிழும் பாக்கியம் இல்லாமல் போனதே, என மன்னன் வருந்தினான்.  உடனே சிவன், மன்னன் சாப்பிடும் நேரத்தில் குழந்தையாக வந்து தோளில் விளையாடியும், கையால் உணவைப் பிசைந்தும் பல வித திருவிளையாடல்களைப் புரிந்து வந்தார்.  ஒருநாள் சிவன் குழந்தையாக விளையாடி மறைந்தார். அப்போது கைகூப்பிய படி,அண்ணாமலையாருக்கு அரோஹரா என்று கூவியழைத்த மன்னனின் உயிர் பிரிந்தது. (வல்லாள மகாராஜாவை எதிரிகள் போரில் வஞ்சகமாகக் கொன்றதாகவும் ஒரு தகவல் உண்டு) அந்தக்கால வழக்கப்படி, மன்னரின் இறப்புச் செய்தி ஓலை, அண்ணாமலையாரின் முன் வாசிக்கப்பட்டது.  அப்போது அப்பா என்ற குரல் ஒலிக்க, ஒளிமயமான குழந்தை வடிவில் சிவன் ஓட்டமும், நடையுமாக கோபுர வாசல் வழியாக அரண்மனையைச் சென்றடைந்தார். ஈமச்சடங்குகளைத் தானே முன்னின்று நடத்தினார். ஜோதி வடிவாகி வானில் மறைந்தார். அண்ணாமலையாரே ஈமச்சடங்கு செய்ய வந்ததைக் கண்ட மக்கள் பரவசம் கொண்டனர்.  அதன்படி, இப்போதும் மாசிமகத்தன்று சம்பந்தனுõர்( தற்போது பள்ளி கொண்டாப்பட்டு) என்னுமிடத்தில் வல்லாள மகாராஜாவுக்கு, அண்ணாமலையார் சிராத்தம் செய்து வருகிறார். இது ஒரு விழாவாக நடத்தப்படுகிறது. காரைக்காலம்மையாரை அம்மா என்றும், வல்லாள மகாராஜாவை அப்பா என்றும் அழைத்த சிவன் நேரில் வந்த மாசிமக நாளில் (நாளை) நாமும் வணங்கும் பேறு பெறுவோம். 

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar