காரைக்கால்: காரைக்கால் திருப்பட்டினத்தில் நடந்த மாசிமக விழாவில் 8 பெருமாள்கள் தீர்த்தவாரியில் கலந்து கொண்டனர். காரைக்கால் திருப்பட்டினம் பட்டினச்சேரி கடற்கரையில் நேற்று மாசிமக தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. கடற்கரையில் மாலை 4 மணிக்கு கோவில்பத்து கோதண்டராமர், நித்யகல்யாண பெருமாள், நிரவி கரியமாணிக்க பெருமாள், திருமருகல் வரதராஜபெருமாள், திருப்பட்டினம் விழிவரதராஜபெருமாள், திருப்பட்டினம் ரகுநாதபெருமாள், திருப்பட்டினம் பிரசன்னவெங்கடேச பெருமாள், திருகண்ணபுரம் சவுரிராஜபெருமாள் எழுந்தருளினர். கடற்கரையில் எழுந்தருளிய பெருமாள்களுக்கு தீர்த்தவாரி நடத்தப்பட்டு தீபாரதனை நடந்தது. அதைத்தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். தீர்த்தவாரி முடிந்து இரவு சாமி வீதி உலா நடந்தது.