நீங்கள் ஒவ்வொருவரும் உங்களின் தனித்தன்மையை இழக்காமல், அதன் போக்கில் நின்று வெற்றியாளர்களாக வளர வேண்டும். அதுவே என் விருப்பம்.தீப்பொறியாக எழுந்து நில்லுங்கள். நல்லெண்ணத்தை எங்கும் பரப்புங்கள்.அனைவரும் ஒற்றுமையுடன் கலந்து பழகுங்கள். உலகில் அரிய பெரிய செயல்கள் செய்வதற்காகவே நீங்கள் பிறந்திருக்கிறீர்கள். எப்போது முகமலர்ச்சியுடன் பணியில்ஈடுபடுங்கள். கடவுளின் அருளால் எல்லாம்நலமாகவே நடக்கும். எந்தச்செயலுக்கும் உங்களை நீங்களே தயார்படுத்திக் கொள்ளுங்கள். அறிவுக்கூர்மையுடன் செயல்படுத்துங்கள். அகந்தையை அகற்றி விட்டு, குழந்தை போல கள்ளம்கபடம் அற்ற மனநிலையில் இருங்கள். இனிமையும், புன்னகையும் இதழில்நிறைந்திருக்கட்டும்.பூமிதேவியைப் போல பொறுமையுடன் இருங்கள். நீங்கள் பொறுமையைக் கைகொண்டால் உலகமே உங்களின் காலடியில் கிடக்கும்.உண்மை எங்கு இழுத்துச் சென்றாலும் அதைப் பின்பற்றிச் செல்லுங்கள். உண்மையாளரையே உலகம் ஏற்கும். கோழைத்தனமும்,கபடசிந்தனையும் ஒருவரைப் பின்னுக்குத் தள்ளிவிடும்.உழையுங்கள்.
இரும்பு போன்ற தசைகளும், எஃகு போன்ற நரம்புகளும்,உறுதியான மனமுமே நமக்கு இன்றைய தேவை.எண்ணத்தில் துõய்மை, தெளிந்த அறிவு, கொள்கையில் உறுதி கொண்டவர்களாக இருங்கள். உற்சாகமுடன் உழைத்து தடைகளைக் கடந்து வெற்றி முழக்கம் எழுப்புங்கள்.சுயநலம் இல்லாமல் வாழ்வதேநல்லொழுக்கம். எனவே, எந்த நிலையிலும் சுயநலத்தை மறக்கப் பழகுங்கள்.எதிலும் பரபரப்புடன்ஈடுபட வேண்டாம். ஆனால், சுறுசுறுப்பை ஒருபோதும் கைவிடாதீர்கள். பிறருக்காக சிறு நன்மையை மனதில் நினைத்தால் கூட சிங்கத்தின் பலம் உங்களுக்கு வந்து விடும். கொடுத்து மகிழுங்கள். நீங்கள் கொடுத்ததை விட ஆயிரம் மடங்காகப் பெருகி உங்களையே வந்தடையும்.வாங்குவதற்காக யாரிடமும் கை நீட்ட வேண்டாம்.பிறருக்கு உதவும் தர்மத்தைவிடபெரியநன்மைஉலகில் வேறில்லை.வாழ்வில் பெரிய சாதனை நிகழ்த்தப் பிறந்தவர் நீங்கள் என்பதை முழுமையாக நம்புங்கள். யாரைக் கண்டு அஞ்சாமல் நிமிர்ந்து நின்று பணியாற்றுங்கள்.உண்மை பொய்யோடுஒருநாளும் சேராது. உலகமே எதிர்த்து நின்றாலும், இறுதியில் உண்மை ஒருநாள் வென்றே தீரும். கீழ்ப்படியும் குணம் கொண்டவனே கட்டளையிடவும் தகுதி பெறுகிறான். முதலில் கீழ்ப்படியக் கற்றுக் கொள்ளுங்கள்.உலகிற்கு நன்மை செய்வது ஒன்றே உங்களின் குறிக்கோளாக இருக்கட்டும். பெயர், புகழைத் தேடி மட்டுமே அலைய வேண்டாம். இடையறாமல் வேலையில் ஈடுபடுங்கள். ஆனால்,அடிமையாக இருக்காதீர்கள்.உழைப்பின் வடிவமான சிங்கம் போல திகழுங்கள். பொன்மகளாகிய திருமகள் உங்களைத் தேடி வருவாள். (மகான் விவேகானந்தர்)