நான்காவது படைவீடாகத் திகழும் சுவாமிமலையில்சிவகுருநாதராக முருகன் கோயில் கொண்டிருக்கிறார். ஆறடி உயரத்தில் வலக்கரத்தில் தண்டமும், இடக்கரத்தை தொடைமீது வைத்தும் கருணைவிழிகளுடன் யோககுருநாதராக வீற்றிருக்கிறார்.வாரத்தில் இருநாட்கள்இவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்படும். செவ்வாயன்று நான்கு சரம் கொண்ட சகஸ்ரநாம மாலை, வைரஅறுங்கோணப் பதக்கம், வியாழனன்று வைரவேல் தாங்கி தங்க கவசத்துடன் காட்சியளிப்பார். ஆபரணங்கள் அணிந்து கம்பீரமாக காட்சி தரும் இவரை அருணகிரிநாதர், ராஜ லட்சண லட்சுமி பெற்றருள் பெருமாளே என்று போற்றியுள்ளார். இத்தலத்தில் தான், அருணகிரிநாதர் முருகப்பெருமானின் திருவடிகளைத் தரிசிக்கும் பேறு பெற்றார்.