கமுதி: கமுதி முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் விழா மார்ச் 24ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதைமுன்னிட்டு அன்றிரவு கும்பம் எடுத்தல், 25ல் அம்மன் கேடயத்தில் மின்னொளியில் பூத வாகனத்தில் நலர் வலம் வருகிறார். மார்ச் 26 முதல் ஏப்ரல் 2ம் தேதி வரை பல்வேறு வாகனங்களில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வருகிறார். ஏப்.,3 ல் பக்தர்கள் பூக்குழி இறங்கி, பால்குடம் எடுத்து நேர்த்தி கடன் செலுத்துகின்றனர். ஏப்.,4ல் முளைப்பாரி ஊர்வலம் நடக்கிறது. ஏற்பாடுகளை சத்திரிய நாடார்கள் உறவின் முறை டிரஸ்ட் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.