மதுரை:மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு நேற்று மாலை வடமாநிலத்தை சேர்ந்த சிலர் வந்தனர். அவர்களில் ஒருவர் அம்மன் சன்னதியை மொபைல் போனில் படம் பிடிக்க முயன்றார். அங்கிருந்த செக்யூரிட்டிகள் விசாரித்தபோது, வந்தவர்கள் மாற்று மதத்தை சேர்ந்தவர் எனத்தெரிந்தது. அவர்களை அங்கே அனுமதிக்காமல் எச்சரித்து திருப்பி அனுப்பியதாக போலீசார் தெரிவித்தனர்.