விருதுநகர் : மல்லாங்கிணர் சூரம்பட்டியில் புனித அமலோற்பவ அன்னை ஆலய திறப்பு விழா நடந்தது. இங்கு ,பாண்டியன் நகர் புனித சவேரியார் ஆலய கிளையாக இந்த ஆலயம் கட்டப்பட்டுள்ளது. இதை மதுரை மறைமாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி சலேசிய மறைபரப்பு சபை தென்கிழக்கு மாகாண தலைவர் அந்தோணி தர்மராஜ் திறந்து வைனத்தனர். பாதிரியார் ராஜசேகர், எஸ்.எப். எஸ்., பள்ளி முதல்வர் பிரிட்டோ, பொருளாளர் அந்தோணிராஜ் பங்கேற்றனர்.