விழுப்புரம்: சாலாமேடு பகுதியில் உள்ள ஆங்காளியம்மன் கோவிலில் 18ம் ஆண்டு மயானகொள்ளை திருவிழா நடந்தது. விழாவையொட்டி 11ம் தேதி மாலை 3:00 மணிக்கு பொன்னேரி குளக்கரையில் இருந்து சக்தி கரகம் ஜோடித்து மகளிர் அக்னிசட்டி ஏந்தி வீதியுலா வந்தனர். நேற்று முன் தினம் மாலை 4:00 மணிக்கு பொன்னேரி மயானத்தில் மயானக்கொள்ளை நிகழ்ச்சி நடந்தது. இரவு 7:00 மணிக்கு அன்னதானம், கும்பம் கொட்டுதல், 10:00 மணிக்கு தெருக்கூத்து நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று அபிஷேக ஆராதனை, மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.