பதிவு செய்த நாள்
14
மார்
2015
12:03
தர்மபுரி: தர்மபுரியில், கோவை மணிவாசகர் அருட்பணி மன்றம், தர்மபுரி கிருஷ்ணகிரி மாவட்ட சைவ தெய்வீக ஆன்மிகப்பேரவை அப்பர் கைலாய காட்சிக்குழு சார்பில், பன்னிரு திருமுறை, சிவபூஜை, இரண்டாம் ஆண்டு மாநாடு, தர்மபுரி டி.என்.சி., விஜய்மஹாலில், இன்று நடக்கிறது.விழாவையொட்டி, அதிகாலை, 5 மணிக்கு சிவபூஜையும், 6.30க்கு கொடியேற்றமும், 7 மணிக்கு அம்மையப்பர் வேள்வியும், 8.30 மணிக்கு பேரொளி வழிபாடு நடக்கிறது. காலை, 10 மணிக்கு குத்துவிளக்கேற்றும் நிகழ்சியும், 10.30க்கு நூல் வெளியீடு நடக்கிறது.ரத்தினகிரி பாலமுருகன் அடிமை சுவாமிகள் தலைமை வகித்து, நூலை வெளியிடுகிறார். சேலம் விஜய் பில்டர்ஸ் பாலசுப்பிரமணியம், தர்மபுரி விஜய்வித்யாலயா கல்வி நிறுவன தலைவர் மணிவண்ணன் உட்பட பலர் பெற்றுக்கொள்கின்றனர். மாலை, 4 மணிக்கு பல்வேறு தலைப்புகளில் அறிஞர்கள், புலவர்கள் ஆன்மிக சொற்பொழிவு ஆற்றுகின்றனர். நாளை காலை, 9 மணிக்கு, தர்மபுரி கோட்டை கல்யாண கமாட்சி அம்மன் உடமனார் மல்லிகார்ஜுனேஸ்வரர் கோவிலில் இருந்து, ஸ்வாமி ஊர்வலம் நடக்கிறது. மதியம், 1 மணி முதல், 1.30 வரை எழுச்சியுரை நடக்கிறது. மாலை, 3 மணிக்கு தர்மபுரி கோவில் குருக்கள் மற்றும் அறக்கட்டளைதாரர்கள் சொற்பொழிவாற்றுகின்றனர். இந்நிகழ்ச்சியில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து அடியார்கள் மற்றும் அனைத்து கோவில் பூசாரிகள் கலந்து கொள்கின்றனர்.