பதிவு செய்த நாள்
14
மார்
2015
12:03
அவிநாசி:கருவலூர்: மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, ஏப்., 4ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது.ஏப்., 3ல், கிராம சாந்தி உற்சவம்; 4ல் கொடியேற்றம், சிம்ம வாகன காட்சியுடன் விழா துவங்குகிறது. 5ம் தேதி மாலை 6:30க்கு, சிம்ம வாகனத்தில் சுவாமி புறப்பாடு; 6ல் ரிஷப வாகன காட்சி; 7ல் மலர் பல்லக்கு, அம்மன் அழைப்பு, திருக்கல்யாண உற்சவம், யானை வாகனத்தில் சுவாமி வீதியுலா நடைபெறும்.ஏப்., 8, காலை 6:00க்கு மாரியம்மன் தேருக்கு எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அன்று மதியம் 2:00க்கு, தேர் வடம் பிடித்து இழுக்கப்படும்; மீண்டும், 9 மற்றும் 10ல் தேரோட்டம் நடைபெறும். 11ல் பரிவேட்டை, குதிரை வாகன காட்சி, தெப்போற்சவம், காமதேனு வாகனத்தில் சுவாமி புறப்பாடு; 12ல் தரிசனம், சிறப்பு அலங்காரத்தில் மாரியம்மன் வீதியுலா காட்சி, இரவு மஞ்சள் நீர் விழா, அன்ன வாகன காட்சி, கொடியிறக்கம் ஆகியன நடைபெறும். 15ல் மறுபூஜை, பாலாபிஷேகம், அலங்கார தீபாராதனையுடன், தேர்த்திருவிழா நிறைவடையும்.