பதிவு செய்த நாள்
14
மார்
2015
12:03
சென்னிமலை: சென்னிமலை யூனியன் எக்கட்டாம்பாளையத்தில் அமைந்துள்ள விநாயகர், மாரியம்மன் மற்றும் பாரிவார மூர்த்திகளுக்கு மஹா கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக கஜ பூஜை, அஸ்வ பூஜை, கோ பூஜைகள் நடந்து, நூற்றுக்கணக்கான பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்தனர். மூன்றாம் கால யாக பூஜை நடந்த பின்பு, மாரியம்மன் மற்றும் பாரிவார தெய்வங்களுக்கு யந்தர ஸ்தாபனம் செய்யப்பட்டு, மருந்துகள் சாத்தப்பட்டது. அதிகாலை, நான்காம் கால யாக பூஜை நடத்தப்பட்டு, மஹா பூர்ணாகுதி, மஹா தீபாராதனை நடந்தது.நேற்று முன்தினம் காலை, 10 மணிக்கு, யாக சாலையில் இருந்து, கலசங்கள் எடுத்து வரப்பட்டு, விநாயகர், மாரியம்மன், கருப்பணசாமி, முனியப்பசாமி ஆகிய மூலவர்கள் மற்றும் கோபுர கலசங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு, மஹா கும்பாபிஷேகம் நடந்தது. காலை முதல், அன்னதானம் நடந்தது.