நெல்லையப்பர் கோயில் ஆனித்திருவிழா: தேரை சீரமைக்கும் பணிகள் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஜூன் 2011 10:06
திருநெல்வேலி:நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழாவை முன்னிட்டு தேரை சீரமைக்கும் பணிகள் துவங்கியுள்ளன. காந்திமதியம்பாள் சமேத நெல்லையப்பர் கோயிலில் 12 மாதமும் திருவிழாக்கள் நடந்துவருகிறது. ஆனிமாதம் நடைபெறும் ஆனிப் பெருந்திருவிழா 10 நாட்கள் மிகவும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மூன்றாவது பெரிய தேராக விளங்கும் நெல்லையப்பர் கோயில் தேர் 500 ஆண்டுகளுக்கும் மேலாக பழமை வாயந்தது. நெல்லையப்பர் கோயில் ஆனித்திருவிழா இந்த ஆண்டு வரும் ஜூலை 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழாவை முன்னிட்டு தேரில் மாராமத்து பணிகள் துவங்கியுள்ளன. தேரை தண்ணீர் ஊற்றி அலசவும், சக்கரங்களை சீரமைக்கும் பணிகளும் துவங்கியுள்ளன. நெல்லையப்பர் கோயில் ஆனித்திருவிழாவை முன்னிட்டு திருவிழா ஏற்பாடுகளை செய்யும் பணிகளில் கோயில் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.